ரீ ரிலீஸாகும் அஜித் – ஷாலினி நடித்த அமர்க்களம்!

1999ம் ஆண்டு வெளியான ‘அமர்க்களம்’ படம், ஆக்ஷன் மற்றும் காதல் காட்சிகளால் நிரம்பியிருந்த படமாகும். இதில் ஷாலினி அஜித்திற்கு ஜோடியாக நடித்திருப்பார். அஜித்குமாரின் ரசிகர்களுக்கு பிடித்த படங்களுள் ஒன்று, ‘அமர்க்களம்’. இந்த படத்தால்தான் அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும், திரை வாழ்க்கையிலும் பெரிய திருப்பமே ஏற்பட்டது.இந்நிலையில், அஜித் – ஷாலினி திருமணநாளை முன்னிட்டு இருவரும் இணைந்து நடித்த ‘அமர்க்களம்’ படம் வரும் 24ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வெளியாகி, 26 ஆண்டுகளை கடந்தது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading