200 மில்லியன் பார்வைகளை கடந்த ‘பெத்தி’ படத்தின் சிக்கிரி பாடல்!

புச்சி பாபு சனா இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், ராம் சரண் தேஜா, ஜான்வி கபூர், சிவராஜ்குமார், ஜெகபதி பாபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பெத்தி’. இப்படத்தின் முதல் சிங்கிளாக ‘சிகிரி சிகரி’ தெலுங்குப் பாடல் கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியானது. அந்தப் பாடலுக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. தற்போது அந்தப் பாடல் 200 மில்லியன் பார்வைகளை யு டியூப் தளத்தில் கடந்துள்ளது. அதன் ஹிந்திப் பதிப்பு 55 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.படத்தின் இரண்டாவது பாடலாக வெளிவந்த ‘ராய் ராய் ரா ரா’ பாடல் தற்போது 58 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading