துரந்தர் படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்று இரண்டு படங்களுமே ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ள நிலையில் ராசியான நடிகை என்கிற பெயரையும் பெற்றுள்ளார் சாரா அர்ஜூன். இதை தொடர்ந்து ஹிந்தியில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன.இந்த நிலையில் தற்போது உஜ்ஜைனில் உள்ள மகா காலேஸ்வரர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார் சாரா அர்ஜூன். அதிகாலையில் நடைபெற்ற புனித பஸ்மா ஆர்த்தி நிகழ்வில் கலந்து கொண்டு பிராத்தனை செய்தார் சாரா அர்ஜுன். அதன் பிறகு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனக்கு ஒரு வேண்டுதல் இருந்தது. அதனால் இங்கே வந்து இருக்கிறேன். இந்த உணர்வை விவரிக்க வார்த்தைகள் இல்லை. சிறப்பாக எதையும் நான் கேட்கவில்லை. சொத்து, சுகம். வெற்றி இவை மட்டும் தான் எனது வேண்டுதலாக இருந்தது” என்று கூறியுள்ளார்.
Add a Comment
