Advertisement

ராஷ்மிகாவின் ‘மைசா’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு – புதிய தேதி விரைவில் அறிவிப்பு!

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில் உருவாகும் தெலுங்குப் படமான ‘மைசா’வில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் தயாராகும் இப்படத்தில், கோண்டு இனத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்ணாக அவர் தோன்றுகிறார். ஈஸ்வரி ராவ், ராகுல் ரவீந்திரன், சமுத்திரக்கனி, ராவ் ரமேஷ், சிவ கந்துகுரி, கார்த்திக் ரஞ்சினி, தாரக் பொன்னப்பா, நிதி சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதுவரை ஏற்றிராத தீவிரமான கதாபாத்திரத்தில் ராஷ்மிகா நடித்துள்ள இப்படத்தில், உடல் மற்றும் மனரீதியாகப் பல சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அவரது பாத்திரம் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான ‘மைசா’ படத்தின் டீசர், ராஷ்மிகாவின் ஆக்ரோஷமான புதிய தோற்றத்தால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக நவம்பர் 27-ம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், வெளியீட்டுத் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் புதிய போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களுக்குச் சிறந்த தொழில்நுட்பத் தரத்திலான திரையரங்க அனுபவத்தை வழங்கும் நோக்கிலும், சில தொழில்நுட்பக் காரணங்களாலும் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனமான அன்பார்முலா பிலிம்ஸ் விளக்கம் அளித்துள்ளது.

Add a Comment

Leave a Reply