கார்த்திகை தீபம் தொடர் ஆரம்பித்த நாள் முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டிஆர்பியில் நம்பர் 1 சீரியலாக உள்ளது .கார்த்திக் ராஜ்-அர்த்திகா நடிக்க இந்த சீரியலின் முதல் எபிசோட் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கதைக்களமும் விறுவிறுப்பாக செல்ல ரசிகர்களின் பேராதரவை பெற்றது. ஆனால் திடீரென முதல் பாகத்தை முடித்து 2வது சீசன் தொடங்கினார்கள்.இதில் நாயகனாக கார்த்திக் ராஜே நடிக்க நாயகியாக வைஷ்ணவி நடித்து வருகிறார். இப்போது கதையில் நாயகிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இப்போது பழைய விஷயங்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டார் என காட்டப்படுகிறது.தற்போது கதையில் விறுவிறுப்பான கதைக்களம் சென்றுகொண்டிருக்க நடிகை ஒருவரின் என்ட்ரி குறித்த தகவல் வந்துள்ளது.அதாவது நடிகை பாப்ரிகோஷ், ப்ரியா என்ற கதாபாத்திரம் மூலம் கார்த்திகை தீபம் சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Add a Comment
