‘சினிமாகான்’ மாநாட்டில் கலந்துகொள்ளும் ‘ராமாயணா’ படக்குழு!

உலகின் மிகப் பெரிய திரையரங்கத் தொழில் மாநாடாக நடைபெறும் ‘சினிமாகான்’ மாநாடு ஏப்ரல் 13 முதல் 16 வரை அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறுகிறது. இதில் 80க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 6000 பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.உலக அளவில் வரவிருக்கும் பெரிய படங்களின் டிரைலர்கள், அறிவிப்புகள் உள்ளிட்டவை இந்த மாநாட்டில் வெளியிடப்படும். அதன் மூலம் உலக அளவிலான சினிமா வியாபாரத்தையும், ரசிகர்களையும் கவர முடியும். சினிமா குறித்த செமினார்களும், புதிய டெக்னாலஜி அறிமுகம் ஆகியவையும் இங்கு நடக்கும். இந்த வருட விழாவில் இந்தியத் திரையுலகத்திலிருந்து ‘ராமாயணா’ படக்குழுவினர் இதில் கலந்து கொள்கிறார்கள். இதற்காக இயக்குனர் நிதிஷ் திவாரி, யாஷ் ஆகியோர் அமெரிக்கா சென்றுள்ளனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading