கடந்த 2001ல் கன்னடத்தில் நடிகர் விஷ்ணுவர்தன் நடிப்பில் வெளியான ‘கோடிகோபா’ திரைப்படம் தற்போது 25 வருடங்கள் கழித்து ரீ ரிலீஸ் ஆகி உள்ளது.இது ரஜினிகாந்த் நடித்த ‘பாட்ஷா’ படத்தின் ரீமேக் ஆக உருவான படம். இதை நாகண்ணா என்பவர் இயக்கியிருந்தார். வெளியான சமயத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த படம், விஷ்ணுவர்தனின் திரையுலக பயணத்தில் ஒரு மைல்கல்லாகவும் அமைந்தது. இந்த நிலையில் இங்கே தமிழில் எப்படி பாட்ஷாவுக்கு எப்போதும் ஒரு கிரேஸ் இருக்கிறதோ அதேபோலதான் கோடி கோபா படமும் அதே கிரேஸை தக்க வைத்துள்ளது. அதனால் பல இடங்களில் இந்த படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
Add a Comment
