துல்கர் சல்மான் நடிப்பில் உருவான ‘ஆகாசம்லோ ஒக தாரா’ திரைப்படம் கடந்த நவம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் மூலம் சாத்விகா வீரவள்ளி கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். விண்வெளிக்குச் செல்ல வேண்டும் என்ற கனவைக் கொண்ட பெண்ணின் கதையை மையமாகக் கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.தெலுங்கு ரசிகர்களைத் தாண்டி தமிழ் ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், வெளியான அடுத்தடுத்த நாட்களில் வசூலில் முன்னேற்றம் கண்டுள்ளது. இதன் மூலம் இதுவரை ரூ.30 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Add a Comment
