அட்லி – அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகும் ‘ராக்கா’ படத்தின் தீம் பாடல் வெளியீடு!

‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்துவருகிறார். ஆரம்பத்தில் ‘AA22xA6’ என தற்காலிகமாக அழைக்கப்பட்ட இந்தப் படத்தில், கதாநாயகியாக தீபிகா படுகோன் நடித்துவருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கர் இணைந்துள்ளார். அல்லு அர்ஜுனின் 22வது திரைப்படமாக உருவாகும் இது, உலகளாவிய அளவில் வெளியாகும் வகையில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. சுமார் 800 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட செலவில் உருவாகும் இப்படத்தில், அல்லு அர்ஜுன் மூன்று விதமான கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்தப் படத்தின் தலைப்பு ‘ராக்கா’ என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனுடன், ‘ராக்கா’ திரைப்படத்தின் தீம் பாடலும் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading