‘பெத்தி’ படத்தில் இணையும் ‘கபுள் பிரெண்ட்லி’ நடிகை மானஷா வாரணாசி?

‘உப்பனா’ திரைப்படத்தின் இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், நடிகர் ராம் சரண் நடித்துவரும் புதிய திரைப்படம் ‘பெத்தி’ ஆகும். இந்தப் படத்தில் ஜான்வி கபூர், சிவராஜ் குமார், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

நீண்ட காலமாக இந்தப் படத்தில் ஒரு சிறப்பு பாடல் இடம்பெறும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. அந்தப் பாடலில் தமன்னா, பூஜா ஹெக்டே, மிருணாள் தாக்கூர் ஆகியோரில் ஒருவருக்கு நடனமாட வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்டது. பின்னர் மிருணாள் தாக்கூர் தேர்வாகியதாக தகவல்கள் உறுதியாகின.

ஆனால் தற்போது, அந்தப் பாடலில் மிருணாள் தாக்கூர் இடம்பெறமாட்டார் என புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், அந்த சிறப்பு பாடலுக்காக ‘கபுள் பிரண்ட்லி’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற மானஷா வாரணாசியை இணைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்று கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading