எனக்கு நடிகை ஸ்ரீதேவி மிகவும் பிடிக்கும்… நடிகர் நானி டாக்!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி, தற்போது பல திரைப்படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்துவருகிறார். நடிகராக மட்டுமின்றி, தயாரிப்பாளராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தனது ‘வால் போஸ்டர் சினிமா’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல திரைப்படங்களை உருவாக்கி வருகிறார்.

சமீபத்தில் அவர் தயாரித்த ‘கோர்ட்டு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்தது. அதனைத் தொடர்ந்து, நானி தற்போது ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்குகிறார். இதில் நானி வித்தியாசமான தோற்றத்தில் தோன்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், மறைந்த நடிகை ஸ்ரீதேவி குறித்து நானி உணர்ச்சிபூர்வமாக கருத்து தெரிவித்துள்ளார். “எனக்கு நடிகை ஸ்ரீதேவி மிகவும் பிடித்தவர். அவர் நடித்த ‘க்ஷண க்ஷணம்’ திரைப்படத்தை பல முறை பார்த்துள்ளேன். எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் பார்க்க வேண்டும் எனத் தோன்றும் திரைப்படம் அது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading