இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் சென்சார் தொடர்பான சிக்கல்களால் வெளியீடு தாமதமாகியுள்ளது. தற்போது நடைபெறவுள்ள தேர்தல் காரணமாக, சென்சார் பணிகள் நிறைவடைந்திருந்தாலும், சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின்னரே திரைப்படத்தை வெளியிட முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படம் முழுமையாக இணையதளங்களில் கசிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, சரத்குமார் நடித்த ‘ஜக்குபாய்’ திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே இணையத்தில் கசிந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், தற்போது இந்த திரைப்படமும் வெளியீட்டுக்கு முன்பே கசிந்திருப்பது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம், குறிப்பாக நடிகர் விஜயின் அரசியல் வருகை மற்றும் இது அவரது கடைசி திரைப்படம் என கூறப்படும் சூழலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தில் படக்குழுவினருக்கு ஆதரவாகவும் பைரசிக்கு எதிராகவும் இந்திய திரையுலக பிரபலங்கள் குரல் கொடுத்துள்ளனர். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, மோகன் பாபு சிவகார்த்திகேயன், கார்த்தி, சூர்யா, ராஜ்குமார் பெரியசாமி, வெங்கட்பிரபு, ஜீவா, சாந்தனு, மனோஜ் மஞ்சு, கலைப்புலி தாணு, வசந்த் ரவி, ஆர்ஜே பாலாஜி, விஷ்ணு மஞ்சு, வரலட்சுமி சரத்குமார், கவுதம் ராம் கார்த்திக், ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி, சிபி சக்கரவர்த்தி, ஜெய், அட்லீ, ஹரிஷ் கல்யாண், சுரேஷ் காமாட்சி, ஐஸ்வர்யா கல்பாத்தி, பிரேம் குமார் பாபி, கார்த்திக் சுப்புராஜ், விஷால், மகத், கவின், குஷ்பு, மிர்ணா, அர்ச்சனா கல்பாத்தி, சிபி சக்கரவர்த்தி, லிங்குசாமி, ராகவா லாரன்ஸ், விக்ரம் பிரபு, பா ரஞ்சித், ஸ்ரீனு வைட்லா, நந்தா உள்ளிட்ட பலரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு ஆதரவாக தங்களது கருத்தை வெளியிட்டுள்ளனர்.
