பழம்பெரும் நடிகை மதுபாலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் சாரா அர்ஜூன்!

தமிழ் திரைப்படமான ‘தெய்வத்திருமகள்’ மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாரா அர்ஜுன், பின்னர் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் இளம் வயது நந்தினி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.

 அதன் பின்னர், கடந்த நான்கு மாதங்களில் வெளியாகிய ‘துரந்தர்’ திரைப்படத்தின் இரண்டு பாகங்களிலும் கதாநாயகியாக நடித்த அவர், இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். இதன் தொடர்ச்சியாக, அவருக்கு பாலிவுட் திரைப்படங்களில் அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

இந்த நிலையில், பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்க உள்ள புதிய திரைப்படத்தில் சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்த திரைப்படம், 1940 முதல் 1965 வரை ஹிந்தி திரைப்படத் துறையில் புகழுடன் விளங்கிய நடிகை மதுபாலாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகிறது. இதில் மதுபாலா கதாபாத்திரத்தில் சாரா அர்ஜுன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘டார்லிங்ஸ்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற ஜாஸ்மின் கே ரீன் இந்த திரைப்படத்தை இயக்க உள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading