தமிழ் திரைப்படத் துறையில் 1990 மற்றும் 2000களில் முன்னணி கதாநாயகியாக விளங்கியவர் கவுசல்யா. ‘காலமெல்லாம் காதல் வாழ்க’, ‘நேருக்கு நேர்’, ‘பிரியமுடன்’, ‘சொல்லாமலே’, ‘பூவேலி’, ‘உன்னுடன்’, ‘ஏழையின் சிரிப்பில்’, ‘வானத்தைப்போல’, ‘மனதை திருடிவிட்டாய்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே தனித்த இடத்தை பெற்றார். மேலும், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது 38 வயதான கவுசல்யா, அக்காள், அண்ணி, அம்மா போன்ற கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். பெங்களூரைச் சேர்ந்த அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் விஜய் குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார். அதில், “யாருக்கும் தீங்கு நினைக்காத மனிதர் தளபதி விஜய். படப்பிடிப்பில் இயக்குநர் கூறும் எந்த விஷயத்தையும் தலைக்கனம் இன்றி ஏற்று நடிப்பார். அப்போது அவர் ஒரு நடிகர்; தற்போது அரசியலிலும் பயணம் செய்கிறார். ஆனால், அவரின் இயல்பில் எந்த மாற்றமும் இல்லை. அவரின் ரசிகர் பலத்தை பார்க்கும்போது அது மிகவும் ஆச்சரியமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
