‘லோகா’ திரைப்படத்தில் என்னை ஏமாற்றி விட்டார்கள்… நடிகர் மம்முட்டி கலகலப்பு பேச்சு!

மலையாள திரைப்படத் துறையின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் மம்முட்டி, தற்போது மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ள ‘பேட்ரியாட்’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்வுகளின் போது அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

அந்த பேட்டியில் ‘லோகா’ திரைப்படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மம்முட்டி, “அந்த திரைப்படத்தில் நான் இடம்பெற்றிருக்கிறேன் என்பதை ஆரம்பத்தில் எனக்கு தெரியாது. அந்தப் படத்தில் நான் ‘வேண்டாம்’ என்ற ஒரு வசனம் மட்டும் பேச வேண்டும் என்று கூறினார்கள்.

மேலும், அந்தப் படத்தில் காட்டப்பட்ட கையாவது என்னுடைய கை கூட இல்லை. அந்த திரைப்படம் வெளியான பிறகுதான், அது நீங்கள் குரல் கொடுத்த கதாபாத்திரமான ‘மூத்தோன்’ என்பவரின் கை என்று கூறினர். இப்போது அந்தக் கதாபாத்திரத்தில் நான் நேரடியாக நடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.உண்மையில், அந்த விஷயத்தில் அவர்கள் என்னை ஏமாற்றியுள்ளனர் என்று நான் நினைக்கிறேன். இனி அந்த திரைப்படத்தில் நான் நடிக்க வேண்டுமானால், அவர்கள் வழங்கும் சம்பளத்தின் மூலம் மட்டுமே என்னை சம்மதிக்கச் செய்ய முடியும்,” என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading