இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கவுதம் ராம் கார்த்திக், மஞ்சு வாரியர், சரத்குமார், அனைகா, ரைசா வில்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. இந்தப் படம் வருகிற ஏப்ரல் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு, தற்போது படக்குழுவினர் ஊடகங்களுக்கு பேட்டிகளை வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து இயக்குநர் மனு ஆனந்த் கூறுகையில், சமீபத்தில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படம் எவ்வாறு ஒரு உண்மையான உளவாளியின் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதோ, அதேபோன்று எந்தவிதத்திலும் குறையாமல் ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படமும் ஒரு உளவாளியின் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதனுடன் சில கற்பனை அம்சங்களையும் இணைத்து, இந்தத் திரைப்படத்தின் திரைக்கதையை 2023ஆம் ஆண்டில் உருவாக்கத் தொடங்கியதாக தெரிவித்தார்.
மேலும், இந்தத் திரைப்படம் ஒரு ஜேம்ஸ் பாண்ட் வகை படத்தை போல் இருக்கும் என்றும், குறிப்பாக 1960ஆம் ஆண்டிலிருந்து 2022ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் நடைபெற்ற பல சுவாரஸ்யமான உளவுத்துறை சம்பவங்களை கதைக்குள் இணைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
