ஒரு படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே அதைப் பற்றி பில்டப் செய்வதை நான் விரும்ப மாட்டேன் – இயக்குனர் அட்லி!

‘ராஜா ராணி’, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ போன்ற தொடர் வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவில் வழங்கிய இயக்குநர் அட்லி, பின்னர் பாலிவுட்டிலும் தனது முதல் படத்திலேயே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். அவரின் இயக்கத்தில் Jawan திரைப்படம் வெளியாகி, ரூ.1100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இந்தப் படத்தில் Shah Rukh Khan மற்றும் Nayanthara நடித்திருந்தனர்.

தற்போது அட்லி, Allu Arjun நடிப்பில் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் Deepika Padukone, Anushka Sharma மற்றும் Mrunal Thakur ஆகிய முன்னணி நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அட்லி விளக்கமளிக்கையில், “ஒரு படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே அதைப் பற்றி மிகையாகப் புகழ்ந்து பேசுவதிலும், தேவையற்ற எதிர்பார்ப்புகளை உருவாக்குவதிலும் எனக்கு விருப்பம் இல்லை. வீண் விளம்பரங்களை நாடுவது எனது பாணி அல்ல. ஆனால், நான் உருவாக்கும் படங்களில் உற்சாகமும், மகிழ்ச்சியும் இருக்கும். அது நேரடியாக ரசிகர்களுக்கு சென்றடையும். ரசிகர்களின் ரசனை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. அதற்கு ஏற்ப படங்களை உருவாக்குவது சவாலாக இருந்தாலும், அந்த சவாலையே நான் விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading