விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ‘கர’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். மேலும் சுராஜ் வெஞ்சரமூடு, ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ‘வாயா என் கர சாமி’ என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று இந்தப் படத்தின் இரண்டாவது பாடலாக ‘கண்ணம்மா என் கண்ணம்மா’ வெளியிடப்பட்டுள்ளது.
இந்த காதல் பாடலை தனுஷ் தானே பின்னணி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐசரி கணேசன் தயாரிப்பில் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் வருகிற 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
