சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 45வது திரைப்படமான ‘கருப்பு’ படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் சூர்யா ஒரு வழக்கறிஞராக நடித்துள்ளார். அவருடன் திரிஷா, நட்டி, இந்திரன்ஸ், சுவாசிகா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் வெளியீடு பலமுறை தள்ளிப்போன நிலையில், தற்போது வரும் மே மாதம் 14ஆம் தேதி ‘கருப்பு’ திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
சமீபத்தில் நடைபெற்ற ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்.ஜே.பாலாஜி, “கருப்பு திரைப்படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படத்தின் அடுத்த பாடல் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.
