தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துத் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் பூமிகா சாவ்லா. 2000ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர், அதற்குப் பிறகு மிகக் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
தமிழில் விஜயுடன் நடித்த ‘பத்ரி’ திரைப்படம் அவருக்கு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர் ‘சில்லுனு ஒரு காதல்’ மற்றும் ‘ரோஜா கூட்டம்’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்த அவர், பின்னர் கேரக்டர் கதாபாத்திரங்களில் தனது திறமையை வெளிப்படுத்தத் தொடங்கினார்.
குறிப்பாக ‘எம்.எஸ். தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி’ திரைப்படத்தில் தோனியின் சகோதரியாக நடித்தது அவருக்கு பெரும் பாராட்டுகளை பெற்றுத்தந்தது. 2007ஆம் ஆண்டு பரத் தாக்கூரை திருமணம் செய்து கொண்ட அவர், சில காலம் சினிமாவிலிருந்து விலகி இருந்தார். தற்போது மீண்டும் திரைப்படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். சமீபத்தில் ‘யூபோரியா’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில், 1998ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தனது பழைய புகைப்படங்களை பூமிகா சாவ்லா சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
