இயக்குனர் பிஎஸ் மித்ரன் உடன் கைகோர்க்கும் தனுஷ்? உலாவும் புது தகவல்!

தமிழில் ‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’, ‘சர்தார்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய பி.எஸ். மித்ரன் தற்போது கார்த்தி நடிப்பில் ‘சர்தார் 2’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது ரிலீஸூக்காக இப்படம் காத்திருக்கிறது.

இந்தப் படத்திற்கு பின், மித்ரன் ஒரு தெலுங்கு நடிகரை வைத்து புதிய திரைப்படம் இயக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், அவர் நடிகர் தனுஷுக்கு ஒரு கதை சொல்லியதாகவும், அந்தக் கதை தனுஷுக்கு பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது தனுஷ் பல திரைப்படங்களில் பிஸியாக இருப்பதால், தனது கால்ஷீட்டை அதற்கேற்ப ஒதுக்க திட்டமிட்டு வருகிறாராம். அதற்குள் மித்ரனும் தனது தெலுங்கு திரைப்படத்தை முடித்துவிட்டு வருவார் என கூறப்படுகிறது. தற்போது தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது ‌

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading