‘ஸ்டார்டம்’ எனப்படும் புகழின் பாரத்தை ஒருபோதும் நான் சுமந்ததில்லை… நடிகர் மம்முட்டி டாக்!

மலையாள திரைப்படத் துறையின் முன்னணி நடிகர்களாக விளங்கும் மோகன்லால் மற்றும் மம்முட்டி, மலையாள சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்கள். இவர்களின் ஆரம்பகாலத்தில் பல திரைப்படங்களில் இணைந்து நடித்திருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக ஒரே படத்தில் இணைந்து நடிக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மோகன்லால் மற்றும் மம்முட்டி இருவரும் இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பட்ரியாட்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஒன்றாக திரையில் தோன்ற உள்ளனர். 

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் மம்முட்டி, ‘ஸ்டார்டம்’ எனப்படும் புகழின் பாரத்தை ஒருபோதும் தாம் சுமந்ததில்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ஒரு நடிகர் ஒரே கதாபாத்திரத்தை பலமுறை செய்ய முடியாது. ஒவ்வொரு முறையும் புதுமை இருக்க வேண்டும். மலையாள திரைப்படங்கள் உலகளவில் வளர்ந்து மேலும் பலரை சென்றடைய வேண்டும் என்பது என் விருப்பமாகும். நானும் மோகன்லாலும் எப்போதும் சாதாரண மனிதர்களாகவே வாழ்ந்து வருகிறோம்; ‘ஸ்டார்டம்’ என்ற எண்ணத்தை எங்கள்மீது சுமத்திக் கொள்ளவில்லை. ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு சவாலாகும்; ஒவ்வொரு திரைப்படமும் ஒரு அபாயம் நிறைந்த முயற்சியாகும். வெற்றிப் படம் உருவாக்குவதற்கு எந்த நிரந்தரமான சூத்திரமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading