ரீ ரிலீஸாகும் தளபதி விஜய்யின் ‘சிவகாசி’ திரைப்படம்… ரசிகர்கள் உற்சாகம்!

சமீப காலங்களில் 1990கள் மற்றும் 2000களில் வெளியான வெற்றிப் படங்களை டிஜிட்டல் முறையில் புதுப்பித்து மீண்டும் திரையரங்குகளில் வெளியிடும் ‘ரீ-ரிலீஸ்’ நடைமுறை அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் ‘கில்லி’, ‘படையப்பா’, ‘மங்கத்தா’, ‘சச்சின்’, ‘3’ போன்ற திரைப்படங்கள் மறுவெளியீடாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, பாக்ஸ் ஆபீஸிலும் சிறப்பான வசூலை பெற்றுள்ளன.

இந்த நிலையில், இயக்குநர் பேரரசு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த 2005ஆம் ஆண்டு வெளியான ‘சிவகாசி’ திரைப்படமும் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்தப் படத்தில் அசின், பிரகாஷ் ராஜ், கஞ்சா கருப்பு, வெங்கட் பிரபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்போது, வெளியான 21 ஆண்டுகளுக்குப் பிறகு ‘சிவகாசி’ திரைப்படம் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதன்படி, வருகிற 24ஆம் தேதி இந்தப் படம் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த செய்தியை அறிந்த விஜய் ரசிகர்கள் இந்தப் படத்தை திரையரங்குகளில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading