ரன்வீர் சிங் மற்றும் சாரா அர்ஜூன் நடித்துள்ள ‘துரந்தர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தில், சாரா அர்ஜுனின் தந்தையாக 71 வயதான மூத்த நடிகர் ராகேஷ் பேடி நடித்துள்ளார். இந்நிலையில், படத்தின் விழாவில் சாரா அர்ஜுனின் தோளில் முத்தமிடும் ராகேஷ் பேடியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலானது. இதனை தொடர்ந்து, “20 வயது நடிகையிடம் 71 வயது நடிகர் இப்படிப் பழகுவது சரியா?” என்று பலரும் விமர்சனம் முன்வைத்தனர்.
இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த ராகேஷ் பேடி, “இந்தப் படத்தில் சாரா என் மகளாக நடித்துள்ளார். அதனால் அவரை நான் எங்கு பார்த்தாலும் மகளாகவே நினைத்து அன்புடன் அணுகுவேன். அதில் எந்த தவறும் இல்லை” என்று விளக்கம் அளித்தார்.
இதற்கிடையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கியாரா அத்வானி, ராகேஷ் பேடியை சந்தித்தார். அப்போது அவர் தயக்கம் காட்டியதை கவனித்த கியாரா அத்வானி, அவரை தானாக முன்வந்து அணைத்துக்கொண்டு அன்பை வெளிப்படுத்தினார். இதுகுறித்து கியாரா அத்வானி கூறுகையில், “கிசுகிசு என்பது தவறானது அல்ல. ஆனால், அதற்கும் ஒரு வரம்பு இருக்க வேண்டும். தந்தை-மகள் பாசத்தை தவறாக புரிந்து கொண்டு பேசுவது சரியல்ல. ஒருவரை அணைத்துக் கொள்வது என்பது அன்பின் வெளிப்பாடு தான். அதில் குற்றம் காண தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.
