உலக நாயகன் கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் ரஜினிகாந்த் நடிக்கும் 173வது திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் முதல் படம் என்பதால், இந்த திட்டத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தற்காலிகமாக ‘தலைவர் 173’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.
இந்த படத்தை ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி தற்போது இப்படத்தை இயக்க உள்ளார் . சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய சிபி சக்கரவர்த்தி, இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என தெரிவித்திருந்தார். மேலும் பசில் ஜோசப் ரஜினிக்கு மகனாக நடிக்கவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 27ஆம் தேதி சென்னை நகரில் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் பிரியங்கா மோகன், ஷோபனா உள்ளிட்டோர் இணைகின்றனர். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
