கவனத்தை ஈர்க்கும் ‘LIK’ படத்தின் :பூக்கட்டும்’ பாடல்!

‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், பின்னர் ‘லவ் டுடே’, ‘டிராகன்’, ‘டியூட்’ போன்ற படங்கள் மூலம் கதாநாயகனாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். பலமுறை வெளியீடு தள்ளிப்போன நிலையில், இந்த படம் வருகிற 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘பூக்கட்டும்’ பாடலின் லிரிக்கல் வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading