தொலைக்காட்சி மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக அறியப்படும் ஆர்.ஜே. விஜய், தற்போது ‘வைப்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு இணையாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதியரின் வாழ்க்கையில் உருவாகும் சிக்கல்கள் மற்றும் உணர்ச்சிகளை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் அம்பேத்குமார் தயாரிக்க, ஹேமநாதன் இயக்குகிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்க, சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் ரெடின் கிங்ஸ்லி, கல்யாணி நட்ராஜன், லல்லு, கதிர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கோடை விடுமுறையை முன்னிட்டு இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
