ஸ்பெயினில் நடைபெறவுள்ள Le Mans Cup தொடரில் பங்கேற்கும் அஜித்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் அஜித் குமார், நடிகராக மட்டுமல்லாமல் கார் பந்தய வீரராகவும் அசத்தி வருகிறார். ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்குப் பிறகு கார் பந்தயத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர், ‘Ajith Kumar Racing’ என்ற தனது சொந்த ரேசிங் அணியையும் தொடங்கியுள்ளார்.

இந்த அணி துபாய், பெல்ஜியம், ஸ்பெயின், அபுதாபி உள்ளிட்ட பல சர்வதேச இடங்களில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று பல விருதுகளை வென்றுள்ளது. தொடர்ந்து பல முக்கியமான பந்தய தொடர்களிலும் இந்த அணி கலந்துகொண்டு வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற Creventic European Series போட்டியில், அஜித் குமார் ரேசிங் அணி 9வது இடத்தை பிடித்து சிறப்பான சாதனை புரிந்தது. இதனைத் தொடர்ந்து, ஸ்பெயினில் நடைபெறவுள்ள Le Mans Cup தொடரிலும் இந்த அணி பங்கேற்க உள்ளது. அந்த போட்டிக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, வருகிற 8, 10, 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் போட்டிகளில் அணி கலந்து கொள்கிறது. இதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி வரை நடைபெறும் பல சர்வதேச போட்டிகளிலும் அஜித் குமார் தொடர்ந்து பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading