மலையாளத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பஹத் பாசில் நடித்த ‘ஆவேசம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியிருந்தார். அதற்கு முன்பு அவர் இயக்கிய ‘ரோமாஞ்சம்’ திரைப்படமும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
‘ஆவேசம்’ படத்திற்குப் பிறகு தற்போது ஜித்து மாதவன், நடிகர் சூர்யாவின் 47வது திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் நஸ்ரியா கதாநாயகியாக நடித்துவருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஜித்து மாதவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஷிபினா பாபின் பாக்கர் தற்போது இயக்குநராக அறிமுகமாகிறார். அவரது முதல் படத்தின் துவக்க விழா சமீபத்தில் கேரளாவில் நடைபெற்றது. இதில் சூர்யா மற்றும் நஸ்ரியா கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். சூர்யா முதல் கிளாப்பை அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.
