பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘பூத் பங்களா’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 16ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் தபு, வாமிகா கபி, பரேஷ் ராவல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மலையாள திரையுலகின் பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இந்த படத்தை இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் ஏக்தா கபூர் இணை தயாரிப்பாளராக செயல்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஏக்தா கபூர், “முன்னதாக அக்ஷய் குமாருடன் இணைந்து நான் தயாரித்த ஒரு திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. அதற்குப் பிறகு, நான் கேட்காமலேயே அவர் என்னை அழைத்து ஒரு பெரிய தொகையை நஷ்டஈடாக வழங்கினார். என் 30 ஆண்டுகால சினிமா அனுபவத்தில் இப்படிப்பட்ட நடிகரை நான் பார்த்ததே இல்லை” என தெரிவித்துள்ளார்.
இதற்கு உடனே பதிலளித்த நடிகை தபு, அப்படியானால் நாம் இணைந்து நடித்த ‘க்ரூ’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதில் கிடைத்த லாபத்தில் எங்களுக்கான பங்கை எப்போது வழங்கப் போகிறீர்கள்?” என்று நகைச்சுவையாகக் கேட்டார். அதற்கு ஏக்தா கபூர், ஒரு தயாரிப்பாளர் லாபத்தை பகிர்ந்த சம்பவம் உங்களுக்கு தெரியுமா? என்று பதிலளித்தார். இதனை கேட்ட தபு சிரித்தபடி ஒப்புக் கொண்டார்.
