போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம்!

மலையாளத் திரைப்பட உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான ஷேன் நிகம், 2023ஆம் ஆண்டு வெளியான ‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படத்தின் வெற்றியால் ரசிகர்களிடையே பரவலாக அறியப்பட்டார். அதே நேரத்தில், சில திரைப்படங்களில் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளாலும் அவர் கவனத்தை ஈர்த்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழில் ‘மெட்ராஸ்காரன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ள அவர், தற்போது மலையாளத்தில் ‘த்ரிதம்’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அவர் ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை மார்ட்டின் ஜோசப் இயக்கியுள்ளார். இதனை இயக்குநர் ஜீத்து ஜோசப் வெளியிடுகிறார். இதற்கு முன்பு ‘கொரோனா பேப்பர்ஸ்’ மற்றும் ‘வேல’ போன்ற படங்களில் போலீஸ் வேடங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட அதிரடி போலீஸ் அதிகாரியாக அவர் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான டிரெய்லரைப் பார்க்கும்போது, இந்த திரைப்படம் அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading