நாளை வெளியாகிறது அல்லு அர்ஜுன்- அட்லி கூட்டணியில் உருவாகும் AA22xA6 படத்தின் டைட்டில் போஸ்டர் !

இயக்குநர் அட்லி இயக்கத்தில், இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைப்பில், நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் AA22XA6. இந்த படத்தில் தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்த படம் தொடங்கியபோது சில அப்டேட்கள் வெளியாகியிருந்தாலும், அதன் பின்னர் படக்குழு எந்தவிதமான தகவல்களையும் வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளது.

நாளை ஏப்ரல் 8ஆம் தேதி அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் என்பதால், இந்த திரைப்படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். குறிப்பாக படத்தின் தலைப்பு அல்லது டீசர் வெளியாகும் என தகவல்கள் பரவி வந்தன.

அந்த எதிர்பார்ப்பை உறுதிப்படுத்தும் வகையில், ஏப்ரல் 8ஆம் தேதி காலை 11 மணிக்கு இந்த திரைப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அதனை பிரதிபலிக்கும் தலைப்பு அமைந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading