தமிழில் எனக்கு ஒரு நல்ல இடத்தை ரசிகர்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது – நடிகை குஷி ரவி!

‘டிரிப்’, ‘தூக்குத்துரை’ படங்களை இயக்கிய டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’. விஒய்ஓஎம் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் இயக்குநர் செல்வராகவன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்துவரும் குஷி ரவி, இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இதில் அவர் செல்வராகவனின் மனைவியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஒய்.ஜி. மகேந்திரன், கவுசல்யா, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.கே. பிரியன் இசையமைத்துள்ளார்; ரவிவர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை குஷி ரவி, “’மனிதன் தெய்வமாகலாம்’ என் முதல் தமிழ் திரைப்படம் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்தப் படத்தை அனைவரும் ரசித்து பாராட்டுவார்கள் என்று நம்புகிறேன். இது முழு குடும்பமும் ஒன்றாக அமர்ந்து பார்க்கக்கூடிய அழகான திரைப்படமாகும். இந்தப் படத்திற்குப் பிறகு தமிழில் எனக்கு ஒரு நல்ல இடத்தை ரசிகர்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தப் படத்திற்காக உழைத்த ஒவ்வொரு கலைஞருக்கும், தொழில்நுட்பக் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் திரையரங்குகளில் இந்தப் படத்தை பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading