‘போர் தொழில்’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் விக்னேஷ் ராஜா, அடுத்து நடிகர் தனுஷை முன்னணி கதாபாத்திரமாக கொண்டு ‘கர’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் தனுஷுடன் மமிதா பைஜூ, கே.எஸ். ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஏப்ரல் 30ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் வெளியீட்டு தேதி நெருங்கி வருவதால், அதனை முன்னிட்டு விளம்பர பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ‘கர’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஏப்ரல் 19ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
