கண்ணன் ரவி குழுமமும் கந்தரா ஸ்டுடியோஸும் இணைந்து தயாரித்துள்ள ‘டிஎன் 2026 தங்க நட்சத்திரம்’ திரைப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். அரசியல் பின்னணியுடன் கலந்த நகைச்சுவை அம்சங்கள் கொண்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், சிறப்பு தோற்றத்தில் சாண்டி நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் நடராஜ் (நட்டி), எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ஸ்ரீத்தா ராவ், விஜி சந்திரசேகர், கிங்காங், தேவி மகேஷ், ஜான் விஜய், ஆடுகளம் நரேன், கிங்ஸ்லி மற்றும் இளவரசு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையா, நடிகராக அறிமுகமான அவர், தற்போது இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், உமாபதி ராமையா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டிஎன் 2026 தங்க நட்சத்திரம்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. மேலும், இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
