கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் உருவான ’29’ படத்தின் ‘மேன்ஷன் குத்து’ பாடல் வெளியாகி வைரல்!

2017ஆம் ஆண்டு வெளியான ‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ரத்ன குமார். அதன் பின்னர் ‘ஆடை’, ‘குலுகுலு’ போன்ற படங்களை இயக்கியதுடன், ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போது, கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ மற்றும் லோகேஷ் கனகராஜின் ‘ஜி-ஸ்குவாட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘29’ என்ற புதிய திரைப்படத்தை ரத்ன குமார் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ரானி, மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், செனாஷ், பிரேம்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘மேன்ஷன் குத்து’ தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை அந்தோணிதாசன் பாடியுள்ளார். பாடல் வரிகளை பாக்கியம் சங்கர் எழுதியுள்ளார். வெளியான இந்தப் பாடல் தற்போது இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading