இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக விளங்கிய கங்குலியின் வாழ்க்கைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படத்திற்கு “தாதா” என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கங்குலியின் கதாபாத்திரத்தை பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் ஏற்று நடிக்கிறார். இயக்குநர் விக்ரமாதித்யா மோத்வானே இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் லவ் ரஞ்சன் மற்றும் அன்குர் கார்க் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்நிலையில், “தாதா” திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 1ஆம் தேதி புதன்கிழமை அன்று தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், 1992ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய சௌரவ் கங்குலி, அவரது ரசிகர்களால் அன்புடன் “தாதா” என அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
