ராமர் என்பது சாதாரண கதாபாத்திரம் அல்ல, கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை… ராமாயணா படம் குறித்து நடிகர் ரன்பீர் கபூர் டாக்!

நிதிஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பகுதிகளாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பகுதி, வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ளார்.

இதற்கிடையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரன்பீர் கபூர், “ராமர் என்பது ஒரு சாதாரண கதாபாத்திரம் அல்ல; கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையின் உருவாகும். கருணை, தைரியம், நல்லொழுக்கம் ஆகியவற்றின் அடையாளமாக இருக்கும் அந்த மனிதரின் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது எனக்கு பெருமையாகவும், அதிர்ஷ்டமாகவும் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

இந்தப் படத்தில் சீதையாக சாய் பல்லவி, அனுமானாக சன்னி தியோல், லக்ஷ்மணனாக ரவி துபே மற்றும் ராவணனாக யாஷ் நடித்துள்ளனர். இப்படம் குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading