சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர் விஷாகா திமான். சண்டிகரை சேர்ந்த மாடல் அழகியான இவரை, சமூக வலைத்தளங்களில் பல லட்சக்கணக்கானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். “தேரா வேணுகா” என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், அதன் பிறகு பல இசை ஆல்பங்களில் நடனமாடி கவனம் ஈர்த்தார். குறிப்பாக “டேஞ்சர் குயின்” என்ற இசை ஆல்பம் மூலம் அதிகளவில் புகழடைந்தார். இதனுடன், பல்வேறு விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது ‘ஹார்ட்குள்ள’ என்ற இசை ஆல்பத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்த ஆல்பத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார். விகாஷ் நாகராஜ் இந்த ஆல்பத்தை இயக்கியுள்ளார்.
மேலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்த ஆல்பம் உருவாக்கப்பட்டுள்ளது. பாடல் வரிகளை கானா சல்லு எழுதியுள்ளார். அனுபமா பாடியுள்ளார். ஜான்ராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபாத் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபாத் கிராந்தி ரெட்டி தயாரித்துள்ள இந்த ஆல்பத்தை சரிகமா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
