மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்துள்ள “பேட்ரியாட்” திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் பகத் பாசில், நயன்தாரா, ரேவதி, கிரேஷ் ஆண்டனி, தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் ரஜீவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நீண்ட காலத்திற்கு பிறகு மம்மூட்டி மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் முன்னதாக ஏப்ரல் 23-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மே 1-ஆம் தேதிக்கு ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
