சூரியின் புதிய படத்தில் இணைகிறாரா நடிகை மமிதா பைஜூ?

நடிகர் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து நடித்த ‘டியூட்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து, நடிகை மமிதா பைஜூ தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது விஜய்யின் ‘ஜனநாயகன்’, சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’, தனுஷின் ‘கர’ போன்ற படங்களில் அவர் நடித்து வருகிறார். இதற்கு இணையாக, தனது தாய்மொழியான மலையாளத்திலும் ஒரு திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ‘மண்டாடி’ திரைப்படத்தைத் தொடர்ந்து, ‘அயலான்’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சூரி நடிக்க உள்ள ஏழாவது திரைப்படத்திலும் மமிதா பைஜூ கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகி வருகிறது. இதனைச் சுட்டிக்காட்டும் வகையில் சமீபத்தில் இப்படத்திற்கான ஒரு போஸ்டரும் வெளியிடப்பட்டது.

மேலும், இந்தப் படத்தை முன்பு பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ இணைந்து நடித்த ‘டியூட்’ திரைப்படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், மமிதா பைஜூவுடன் அந்த நிறுவனம் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தப் படத்தில் அவர் சூரிக்கு ஜோடியாக நடிக்கிறாரா அல்லது முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் தோன்றுகிறாரா என்பது குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading