அருணாச்சலம் படத்தின் “அதாண்டா இதாண்டா” பாடலின் வெளி வாராத மாற்று வரிகளை வெளியிட்ட கவிஞர் வைரமுத்து!

1997 ஆம் ஆண்டு இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘அருணாச்சலம்’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் இடம்பெற்ற “அதாண்டா இதாண்டா” பாடல், இன்றளவும் ரசிகர்களின் மனதில் அழியாத இடத்தை பிடித்துள்ளது. இந்தப் பாடலுக்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்ததுடன், கவிஞர் வைரமுத்து பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

இந்த பாடலில் இடம்பெற்ற “அதாண்டா இதாண்டா” என்ற வரி அந்நாளில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று, இன்று வரை சமூக வலைதளங்களில் பரவலாக பயன்படுத்தப்படும் வசனமாக மாறியுள்ளது. பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குரலில் ஒலித்த இந்தப் பாடல், காலத்தை கடந்தும் ரசிகர்களால் கொண்டாடப்படும் “எவர்க்ரீன் ஹிட்” பாடலாக திகழ்கிறது.

இந்நிலையில், “அதாண்டா இதாண்டா” பாடலைப் பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கவிஞர் வைரமுத்து, இந்தப் பாடலுக்காக முதலில் எழுதியிருந்த மாற்று பல்லவி மற்றும் சரணங்களை தற்போது தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவாக பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவு:

அவர் வெளியிட்ட இந்த பதிவு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading