பாலிவுட் நட்சத்திரம் சல்மான் கான் இறுதியாக நடித்த ‘சிக்கந்தர்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று தோல்விப்படமானது. இந்நிலையில் விஜய்யின் வாரிசு படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில்தான் அடுத்து சல்மான் கான் நடிக்கவுள்ளார்.
நடிகர் சல்மான் கான் வம்சி கூட்டணி புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக நேற்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இதனை தில் ராஜுதயாரிக்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு முன் பாலிவுட்டில் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா நடித்து அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.
