திரைப்படத் துறையில் பிஆர் (PR) கலாசாரம் குறித்து நடிகை ராஷி கன்னா கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். இவர் கூறியதாவது, “சினிமா துறையில் இப்போது பிஆர் குழுக்களின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. சமூக வலைதளங்களில் ஹைப் உருவாக்கி, சிறிய நடிகர்களையும் பெரிய ஸ்டார்களாக மாற்றும் சக்தி அதற்கே உள்ளது.
மேலும், ராஷி கன்னா கூறியதாவது, பிஆர் மூலம் கிடைக்கும் புகழ் தற்காலிகமானது. உண்மையான புகழ் என்பது நமது வேலை, உழைப்பு, திறமை மூலமே கிடைக்கும். பிஆர் ஹைப்பால் கிடைக்கும் புகழ் நிலைத்திராது.
இதனால் தன்னிடம் தனியாக பிஆர் குழு எதுவும் இல்லாமல், தனது திறமை மற்றும் உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து செயல்பட்டு வருவதாகவும் ராஷி கன்னா தெரிவித்தார். அவரது இந்த கருத்துகள் தற்போதைய திரைப்படத் துறையில் கவனத்தை ஈர்த்துள்ளன.
