சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் நடிகை கிரித்தி சனோன், காக்டெய்ல் 2 திரைப்படத்தில் தனது கதாபாத்திரம் மிகவும் சிறப்பானது என்றும், அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “நான் இதுவரை நடித்த கதாபாத்திரங்களை விட இந்த படத்தில் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறேன். இது நான் இதுவரை செய்ததில் மிகவும் கவர்ச்சியான கதாபாத்திரம். இயக்குனர் ஹோமி என்னுள் இருந்த புதிய பக்கத்தை வெளிக்கொண்டுவந்துள்ளார். அது எனக்கே தெரியாத ஒன்று” என்றார்.
இந்த திரைப்படம் ஜூன் 19-ம் தேதி திரைக்கு வர உள்ளது. தற்போது ரசிகர்களிடையே இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
