‘ஜனநாயகன்’ தான் கடைசி படம் என ஏன் அறிவித்தீர்கள் என்று விஜய்யிடம் கேட்டேன் – நடிகர் ஷாம் டாக்!

தமிழக வெற்றி கழகத் தலைவரும் நடிகருமான விஜய், தற்போது அரசியல் துறையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அவர் நடித்து வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படமே தனது கடைசி படம் என ஏற்கனவே அறிவித்திருந்தார். அரசியலில் முழுமையாக ஈடுபட முடிவு செய்துள்ளதால், இந்த படத்துடன் தனது சினிமா பயணத்தை நிறைவு செய்கிறேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, திரைப்படத் துறையினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில், நடிகரும் விஜயின் நெருங்கிய நண்பருமான ஷாம், இதுகுறித்து விஜய்யுடன் நடைபெற்ற உரையாடலை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், ‘ஜனநாயகன்’ தான் கடைசி படம் என்று ஏன் அறிவித்தீர்கள் என்று விஜயிடம் கேட்டபோது, “ஒரு விஷயத்தில் முழு கவனம் செலுத்தினால்தான் அதில் வெற்றி பெற முடியும்” என்று விஜய் கூறியதாக தெரிவித்தார்.

மேலும், ‘ஜனநாயகன்’ திரைப்படம் எப்போது வெளியானாலும் அது மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும், தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் திறன் அதற்கு உள்ளது என்றும் ஷாம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading