முருகேசன் என்ற கதாபாத்திரத்தில் ‘கர’ படத்தில் நடித்துள்ள நடிகர் ப்ரித்வி பாண்டியராஜன்!

தனுஷ் நடித்த தேரே இஷ்க் மே திரைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் தமிழில் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பைப் பெறாதபோதிலும், இந்தி மொழியில் 160 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலைப் பெற்று வெற்றிப் படமாக அமைந்துள்ளது. தற்போது, தனுஷ் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள கர திரைப்படத்தில் தனது நடிப்பை நிறைவு செய்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். மேலும், முக்கியமான கதாபாத்திரங்களில் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர். ‘கர’ திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை தேனி ஈஸ்வர் மேற்கொண்டுள்ளார். இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

‘கர’ திரைப்படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் வகையில் படக்குழு தொடர்ந்து போஸ்டர்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், சுராஜ் வெஞ்சரமூடு ‘பரதன்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், மமிதா பைஜு ‘செல்லி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், கருணாஸ் ‘காசி மாயன்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் போஸ்டர்கள் மூலம் முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ‘கர’ திரைப்படத்தில் ப்ரித்வி பாண்டியராஜன் ‘முருகேசன்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக புதிய போஸ்டர் மூலம் படக்குழு தற்போது அறிவித்துள்ளது. இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading