சமுத்திரக்கனி- கௌதம் மேனன் நடிப்பில் உருவான ‘கார்மேனி செல்வம் ‘ படத்தின் டிரெய்லர் வெளியீடு!

இயக்குநர் ராம் சக்ரீ இயக்கத்தில் உருவாகியுள்ள கார்மேனி செல்வம் திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன், லட்சுமி பிரியா சந்திரமௌலி, ரெடின் கிங்ஸ்லி, படவா கோபி, ஹரிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவை யுவராஜ் மேற்கொண்டுள்ளார். பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ராகவ் ரமேஷ் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் ஒரு பயணத்தை மையமாகக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள “சில பயணங்கள் உங்களை மிகவும் தொலைவிற்கு அழைத்துச் செல்லும்; சில பயணங்கள் உங்களை உங்கள் வீட்டிற்கே திரும்ப அழைத்து வரும்” என்ற கருத்து, இந்தக் கதையின் மையப் பொருளை வெளிப்படுத்துகிறது. இதனால், இந்த திரைப்படம் ஒரு மறக்க முடியாத பயண அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என்பதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த திரைப்படத்தில் சின்ன பொண்ணு மற்றும் அந்தோணி தாசன் இணைந்து பாடியுள்ள ‘குறு குறு’ பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் டிரெய்லரும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading