லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனர் இயக்கும் படத்தில் நடிக்கும் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி!

தெலுங்கு திரைப்பட உலகில்  தனக்கென தனித்த ரசிகர் வட்டத்தை உருவாக்கி, முக்கியமான நடிகராக வலம் வருபவர் ராம் பொத்தினேனி. சில மாதங்களுக்கு முன்பு அவரின் நடிப்பில் வெளியான ஆந்திரா கிங் தாலுகா திரைப்படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றாலும், வசூல் அளவில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதன் காரணமாக, தனது அடுத்த திரைப்படத்தைத் தேர்வு செய்ய அவர் சுமார் ஆறு மாதங்கள் இடைவெளி எடுத்துக் கொண்டு பல இயக்குநர்களின் கதைகளை கேட்டுப் பரிசீலித்து வந்தார்.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஒருவரின் கதையால் மிகவும் ஈர்க்கப்பட்ட ராம் பொத்தினேனி, அவரையே தனது அடுத்த படத்தின் இயக்குநராக தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கு முன்பு இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் தி வாரியர் திரைப்படத்தில் நடித்திருந்தாலும், அந்த படம் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறவில்லை. அந்த நிலையில், லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனர் இயக்கும் இந்த புதிய படம் ராம் பொத்தினேனிக்கு முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading