‘காசி மாயன்’ கதாபாத்திரத்தில் தனுஷின் ‘கர’ படத்தில் நடித்துள்ள நடிகர் கருணாஸ்!

‘போர் தொழில்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் ராஜா இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கர’. இந்தப் படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கிராமப்புறத்தை மையமாகக் கொண்டு ஆக்சன் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில், இப்படத்திலிருந்து வெளியிடப்பட்ட முதல் தோற்றப் போஸ்டர் மற்றும் தலைப்பு காணொளி ஆகியவை, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

நடிகர் கருணாஸ் ‘காசி மாயன்’ என்ற கதாபாத்திரத்தில் கர படத்தில் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கு முன்பாகவே மமிதா பைஜு, கே.எஸ். ரவிகுமார், சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோரின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்களும் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading